நடிகர் விஜய் வாரிசு திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் ஹெச்.ராஜாவை தாக்கி பேசியுள்ளார்.
ஒருமுறை பாஜகவின் ஹெச்.ராஜா போட்ட டிவீட் சர்ச்சையான நிலையில் ‘எனது அட்மின்தான் அப்படி ட்வீட் செய்தார்’ என்று கோர்ட்டில் சொல்லி தப்பித்துக் கொண்டார். இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 24 ஆம் தேதியன்று நடைபெற்றது.
அப்போது நடிகர் விஜய் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை பாடினார். பின்னர் பேசிய அவர், ஹெச்.ராஜாவின் ட்வீட்டை கேலி செய்யும் விதமாக, “எனக்கு ட்வீட் செய்யத் தெரியாது. அட்மினை கூப்பிடவா?” என்று சொல்லி கேலியாக சிரித்தார்.