Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எனக்கு தெரியாம 2வது திருமணம்…. கணவர் மீது மனைவி புகார்…. போலீஸ் விசாரணை….!!

பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  பெண் ஒருவர்  2-வது திருமணம் செய்த கொண்ட கணவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

சென்னையில் வசித்து வருபவர் நித்யா லட்சுமி.  பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியது, கடந்த 2011-ஆம் ஆண்டு எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றேன். அதன் பின்னர் கோவை மலுமிச்சம்பட்டியில் வசித்து வரும் விஜயகுமாரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன்.திருமணத்தின் போது அவருக்கு  15 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கணவர் மற்றும் மாமனார் மாமியார் ஆகியோருடன் வசித்து வந்தேன்.

சில நாட்களில் மேலும் ஒரு லட்சம் கேட்டு என்னை அடித்து துன்புறுத்தி அதோடு கர்ப்பமாக இருந்த என்னை கருவை கலைக்குமாறு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வற்புறுத்தினர். அதற்கு நான் மறுப்பு தெரிவித்து விட்டு சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். அதன் பிறகு எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஒரு நாள் எனது கணவர் சென்னைக்கு வந்து  குழந்தையைபார்த்துவிட்டு கோவைக்கு சென்றுவிட்டார்.

ஆனால் அதன் பிறகு அவர் என்னிடம் தொடர்பு கொண்டு பேசவில்லை  இந்த நிலையில்  பெண் ஒருவர் என்  செல்போனில் தொடர்பு கொண்டு எனது கணவரை 2வது திருமணம் செய்து உள்ளதாக கூறினார்.இதனால்  எனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.அந்த  புகாரின் பேரில் நித்யா லட்சுமியின் கணவர் மீது பேரூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |