Categories
சினிமா

எனக்கு நடிக்க ஆசை…. கடவுள் மனது வைக்க வேண்டும்….. நடிகர் ரஜினி…..!!!!

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். அதன்காரணமாக கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். அந்த வரிசையில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். ஒரு சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு மேலும் சில படங்களில் தொடர்ந்து நடிக்கும் எண்ணம் உள்ளது. அதற்கு எல்லாம் கடவுள் தான் மனது வைக்க வேண்டும் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் இந்த கொரோனா தொற்று முடிவுக்கு வந்தபிறகு தான் அந்த எண்ணத்தை சாத்தியப்படுத்த முடியும். என் உடல் நிலையும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |