மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் அரசு வேலை கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், புனேவை சேர்ந்த என்ற இளைஞர் அரசு தேர்வு ஆணையம் தேர்வுக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தார். முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் அடுத்த நிலை தேர்வுக்காக காத்திருந்தார். கொரோனா காரணமாக அனைத்து அரசு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் மனமுடைந்த அந்த இளைஞர் தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு உயிரிழந்துள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “அரசு தேர்வு என்பது ஒரு மாயை. தனக்கு மிகப் பெரிய அளவில் கடன் இருக்கின்றது. தனியார் வேலைக்கு சென்றால் அதை ஈடுகட்ட முடியாது, என்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டு நான் படித்து முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றேன். கொரோனா இல்லை என்றால் அனைத்து தேர்வுகளும் சரியான நேரத்தில் நடந்து இருக்கும். எனது வாழ்க்கையும் மாறி இருக்கும். ஏதாவது நல்லது நடக்கும் என்ற நம்பிக் கையைப் பிடித்துக் கொண்டு இருந்தேன்.
ஆனால் தற்போது எனக்கு இருந்த நம்பிக்கை அனைத்தும் போய்விட்டது. என் தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல. இது எனது சொந்த முடிவு” என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து இவரின் தந்தை புனேவில் அச்சகம் ஒன்று வைத்து இருக்கின்றார். அவர் தனது மகன் தற்கொலை செய்து கொண்டதை காவல்துறைக்கு தெரியப்படுத்தி விட்டு, அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.