இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில், இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது என்றும் இந்த உண்மையை பேசுவதே தேசபக்தி.
நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதே ஓர் இந்தியனாகிய நமது தலையாய பணி. நமது மண்ணை சீனா ஆக்கிரமித்தது தெளிவாக தெரிகிறது.
இது தொடர்பாக செயற்கைக்கோள் புகைப்படங்களை பார்த்த பின்னும் முன்னாள் ராணுவ வீரர்களிடம் பேசிய பின்னும் நமது மண்ணை சீனா ஆக்கிரமிக்கவில்லை என எப்படி பொய் சொல்ல முடியும். இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்த உண்மையை மறைத்து, ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் என்றும், இந்த விவகாரத்தில் தொடர்ந்து உண்மைகளை உரத்த குரலில் பேசுவேன்” என வீடியோவை பதிவிட்டிருந்தார்.