மாவட்ட ஆட்சியர் காரின் முன்பு பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் ஜான்சிராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள வங்கியில் கடந்த 2011- ஆம் ஆண்டு கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் இதுவரை கடன் வழங்கவில்லை. இந்நிலையில் மீண்டும் அவர் அதே வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜான்சிராணி நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
இதனையடுத்து ஜான்சிராணி ஆட்சியர் அலுவலகத்தில் நின்ற மாவட்ட ஆட்சியரின் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட ஜான்சிராணியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து ஜான்சிராணி போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.