சகோதரன் தரக்குறைவாக பேசியதால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன். இவருக்கு கற்பகம் என்னும் மனைவி இருக்கிறார். இவருக்கும், இவரது சகோதரர் மணிக்குமார் என்பவருக்கும் இடையே வெகு நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி மணிக்குமார் தங்கை கற்பகத்தை தரக்குறைவாக பேசியதால் மனமுடைந்த கற்பகம் அரளி விதையை அரைத்து சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
பின்பு அக்கம்பக்கத்தினர் கற்பகத்தை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கற்பகத்தின் கணவர் குபேந்திரன் கூடுவாஞ்சேரி போலீஸில் மணிக்குமார் மீது புகார் அளித்தார்.
மேலும் இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.