தமிழ் சினிமாவில் நடிகர்களின் பெயர்களுக்கு முன்னால் அடைமொழி இடம்பெறும் வழக்கம் உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், இளைய தளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என முன்னணி நடிகர்கள் அடைமொழியுடன் வலம் வருகின்றனர். எனினும் பல நடிகர்கள் தங்களுக்கு அடைமொழி வேண்டாம் என்ற கொள்கையில் உறுதியோடு இருக்கின்றனர். முன்னணி கதாநாயகன் ஆன தனுஷ், எனக்கு பட்டமேவேண்டாம் என பிடிவாதமாக இருக்கிறார்.
இதனால் ரசிகர் மன்றங்கள் சார்பாக பல்வேறு வேண்டுகோள் வைத்தபோதும் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவரை இளம் சூப்பர் ஸ்டார் என்று சிலர் அழைத்தபோது, கையெடுத்து கும்பிட்டு இந்த அடைமொழியே வேண்டாம்பா என்று தனுஷ் மறுத்தார். இதேபோன்று சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விக்ரம்பிரபு, விஷ்ணு விஷால், அதர்வா, விமல், ஜெய் உள்ளிட்ட பலரும் தங்களுக்கு அடைமொழி வேண்டாம் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள்.