Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு பணம் கொடுக்க முடியல” காவல் நிலையத்தில் வாலிபர் செய்த வேலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காவல் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சுதாகரின் மனைவி சுதா தனது சகோதரரான பிரசாந்த் என்பவரிடம் பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் பிரசாந்த் தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு சுதாகரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதுகுறித்து சுதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால்  எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த சுதாகர் கடந்த 31-ஆம் தேதி காவல் நிலையத்தின் முன்பு உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த சுதாகரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுதாகர் நேற்று பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |