பாகிஸ்தானில் பிரசவ செலவுக்கு பணம் செலுத்த முடியாத தம்பதியரின் குழந்தையை வேறொரு தம்பதியருக்கு விற்றதாக மருத்துவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் துலம்பா என்ற பகுதியில் குழந்தை பெறுவதற்காக மருத்துவமனையில் பெண்ணொருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தை பிறந்தவுடன் அதற்கான பில்லை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்களால் செலுத்த முடியாது என்று கூறியிருக்கின்றனர். இதனால் கோபமடைந்த அந்த மருத்துவர் பிறந்த குழந்தையை வேறொரு தம்பதியருக்கு விற்று உள்ளார். இதைத்தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையை கைப்பற்றி பெற்றோர்களிடம் கொடுத்துவிட்டு மருத்துவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இப்போது அந்த மருத்துவமனையில் இருப்பவர்கள் தங்கள் மருத்துவரை போலீசில் புகார் அளிக்க வேண்டாம் என்று அந்த தம்பதியரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர் .