அதிமுக தொண்டன் என்ற பெருமை மட்டும் எனக்கு போதும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
புதிய அவைத்தலைவர் பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்டதற்கு, உரிய நேரத்தில், ஒரே நாளில் அது குறித்து அறிவிப்புகள் கட்சி வெளியிடும், புதிய அவைத்தலைவர் பட்டியலில் உங்கள் பெயரும் இருக்கிறதா ? என்ற கேள்விக்கு, இல்லை என்னை பொருத்தவரை சாதாரண தொண்டன் நான், எப்போதுமே பதவி எனக்கு இரண்டாவது பட்சம் தான்.
நான் வாழ்க்கையிலே பெருமை கொள்ளுகின்ற ஒரு விஷயம் என்று சொன்னால் நான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டன், என்கின்ற அந்த ஒரு பெருமை எனக்கு போதும். எனவே அந்த ஒரு பெருமை இருக்கும்போது, எனக்கு கட்சி பார்த்து எது செய்தாலும் சரி, அதை பொருத்தவரையில் நான் எந்த ஒரு பொறுப்பாக இருந்தாலும் சரி, நான் பதவியாக நினைப்பதில்லை, ஒரு பணியாகத்தான் நினைக்கிறேன். என்னை பொருத்தவரை ஒரு தொண்டனாக இருப்பதில் நான் பெருமை கொள்கின்றேன்.