பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா பயத்தில் ரயில் முன் நின்று தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த தம்பதிகள் ரெஜினால்டு – ரோஸலின்ட்வெவர். இதில் ரோஸலின்ட்வெவர் என்பவர் கடந்த சில தினங்களாக உடல்நல குறைவால் அவதிபட்டுவந்துள்ளார். மேலும் அவர் தனக்கு கொரோனா வந்துவிட்டதோ? அது தனது குடும்பத்துக்கும் பரவி விடுமோ? என்ற பயத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை 5.25 மணிக்கு பிரித்தானியாவில் இருந்து வேகமாக வந்து கொண்டிருந்த ரயிலின் முன்பு நின்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் தனது தற்கொலைக்கான காரணம் எதுவும் குறிப்பிடவில்லை. இந்நிலையில் இவர் கொரோனா வந்துவிட்டதாக பயந்து தான் தற்கொலை செய்திருப்பார் என்று பலரும் கருதுகின்றனர்.