Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு பயமெல்லாம் இல்லை…. நிச்சயமாக இவரை ஜெயிக்க வைப்பேன்…. டிடிவி சொன்ன அந்த ”இவர்” யார் தெரியுமா…?

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் அமமுக – தேமுதிக கூட்டணி குறித்து பேசியுள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியானது, தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. மேலும் இப்பேச்சுவார்தையில் அமமுக கட்சியானது, தேமுதிக கட்சி போட்டியிடுவதற்க்காக 60 தொகுதிகளை வழங்கியுள்ளது.

இதனிடையே சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தை சந்தித்த டிடிவி தினகரன் பின்னர் செய்தியாளர்களையும்  சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது “தமிழக மக்களின் நலனுக்காக தான் அமமுக – தேமுதிக கூட்டணி உருவாகியுள்ளது மேலும்  தீய சக்தியான திமுகவையும், துரோக கட்சியான அதிமுகவையும் வீழ்த்துவது தான் எங்களுடைய முக்கிய நோக்கமாகும்” என்றும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய தினகரன் நாங்கள் ஆர்.கே நகர் தொகுதியில்  போட்டியிடுவதற்கு பயந்துதான்  கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக கூறுவது முற்றிலும் தவறு என்று கூறிய அவர் தேமுதிக கட்சிக்காக 42 தொகுதிகளில் அமமுக கட்சி வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுள்ளனர் என்ற தகவலையும் குறிப்பிட்டுள்ளார். மேலும்  விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிக கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் பிரேமலதாவை வெற்றி பெற செய்வோம் என்றும் தினகரன் கூறியுள்ளார்.

Categories

Tech |