நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் தாலுகா கருப்பம்பலம் ஊராட்சி மன்ற தலைவராக சுப்பராமன் என்பவர் இருந்து வருகிறார். 9 வார்டுகள் கொண்ட இந்த ஊராட்சியில் தொடர்ந்து 32 வருடங்களாக தேர்தல் நடைபெறாமல் போட்டியின்றி ஊராட்சி தலைவர் தேர்வு செய்யப்பட்ட வந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவராக சுப்பராமன் வெற்றி பெற்று பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில் அவர் கூறியதாவது, “எனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வருகிறது. அதனால் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதனை அடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பெயரில் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பராமனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு” அளிக்கப்பட்டு வருகிறது.