Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“எனக்கு பாய் ஃபிரண்ட் வேணும்!”…. குட்டி நயன்தாராவின் அட்ராசிட்டி…. ஷாக்கான ரசிகர்கள்….!!!!

அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அனிகா சுரேந்திரன் ‘விஸ்வாசம்’ படத்தில் நயன்தாரா மற்றும் அஜித்துக்கு மகளாக நடித்துள்ளார். இதனால் அனிகாவை ரசிகர்கள் குட்டி நயன்தாரா என்றும், அஜித்தின் ரீல் மகள் என்றும் அழைத்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் அனிகா எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்.

அந்த வகையில் அனிகா அவ்வப்போது கிளாமர் வழியும் புகைபடங்களையும் பகிர்ந்து வருகிறார். அதனை பார்க்கும் ரசிகர்கள் இந்த வயசுலயே கவர்ச்சியா ? என கேள்வி கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் அனிகா பெயரில் உள்ள டுவிட்டர் ஹேண்டிலில் ஒரு பதிவு போட்டோவுடன் பகிரப்பட்டுள்ளது. அந்த பதிவில் “எனக்கு ஒரு பாய் ஃபிரண்ட் தேவை! க்யூட்டாகவும், ஸ்மார்ட்டாகவும் உள்ள பாய்ஸ் டேக் செய்யுங்கள்” என்ற கேப்ஷன் போட்டு அனிகாவின் செல்பியுடன் டுவிட் போடப்பட்டுள்ளது.

அதனை கண்ட ரசிகர்கள் அனிகாவா இப்படி கேட்டிருக்கிறார் ? என அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிலும் சிலர் தங்களுடைய போட்டோக்களை டேக் செய்து வருகின்றனர். இன்னும் சில இணையவாசிகள் “சிறுவயதாக இருக்கும்போது ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடி விளையாடினீங்க! இப்போ கொஞ்சம் பெரிய பெண் ஆனதும் பாய் ஃபிரண்ட் தேவைப்படுகிறதா ? இருங்க உங்க அப்பா தூக்குதுரை கிட்ட சொல்றேன்” என்று கேலியாக கமெண்ட் செய்துள்ளனர்.

Categories

Tech |