தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வாரிசு படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இந்த நிலையில் வாரிசு பட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய ராஷ்மிகா, உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? உங்கள் Crush யார் என்று கேட்டால் நான் விஜய் என்று தான் சொல்வேன் என ராஷ்மிகா பெருமிதம் தெரிவித்தார். நான் இங்க நின்னு உங்கள் முன்னாடி பேசுகிறேன் என்பதை நம்ப முடியவில்லை. அப்பாவுடன் இணைந்து கில்லி படம் பார்த்தேன். அதன் பின் விஜய் பேசுவதை பார்ப்பது, அவரை போல நடனமாடுவது, அவரை போல இமிடேட் செய்வது என இருந்தேன் என்றார்.