Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு பிடித்த நடிகர், எனக்கு பக்கத்தில்…..” வரலட்சுமியின் நெகிழ்ச்சியான பதிவு…!!!!!

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிகர் விஜய் உடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது.

இத்திரைப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படபிடிப்பானது சென்னையில் நடந்து வந்தது. இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இதனால் விஜய் விசாகபட்டினத்திற்கு படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து புறப்பட்டார். விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட விஜய்யின் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

அந்த விமானத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் பயணம் செய்துள்ளார். அப்போது விஜயுடன் எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஹைதராபாத்திற்கு இவ்வளவு நல்ல விமானம் இதுவரை இருந்ததில்லை. எனக்கு பிடித்த நடிகர் விஜய் எனது பக்கத்தில்…. ஒரு நல்ல நாள். நிறைய அரட்டையும் சிரிப்பும். கொஞ்சம் லுடோவும்… மொத்தத்தில் நல்ல விமான பயணம் என கூறியுள்ளார்.

Categories

Tech |