ஒரத்தநாடு அருகே சசிகலாவுடன் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சந்தித்து பேசி உள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சசிகலா தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பதாகவே சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றார்.. தஞ்சாவூரில் திருமண விழாக்கள், கோவில் விழாக்கள், தொண்டர்களை சந்திப்பதற்கான நிகழ்ச்சிகள் ஆகியவை எல்லாம் இந்த சுற்றுப்பயணத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.. அப்போது ஒரத்தநாடு அருகே ஓவல்குடியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் இன் தீவிர ஆதரவாளருமான வைத்திலிங்கம் சந்தித்து பேசி உள்ளார்..
அதுமட்டுமில்லாமல் இன்று வைத்திலிங்கம் தனது பிறந்தநாள் என்று அவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு சசிகலா வாழ்த்து தெரிவித்து இனிப்பு கொடுத்துள்ளார். ஒற்றை தலைமை பிரச்சினை அதிமுகவில் தொடர்ச்சியாக இருந்து வரக்கூடிய சூழலில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சசிகலா சொல்லி வருகிறார்..
ஓபிஎஸ்சும் அதே கருத்தை வெளியிட்டு வரும் நிலையில், இருவரது சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது. ரகசியமாக சந்திப்பு நடைபெற்று வந்தாலும் வெளிப்படையாக இருவரும் சந்தித்து பேசி இருப்பது அதிமுகவில் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.
அஇஅதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு #வைத்தியலிங்கம் தனது பிறந்தநாளை முன்னிட்டு #சசிகலா அவர்கள் அண்ணன் அவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்தினார் சின்னம்மா அவர்கள் 🌺🌺💐💐🌷🌷💐💐🍁🍁💐💐🌺🌺🌷 pic.twitter.com/0ryTUYhv2T
— M.SELVAM (@MSELVAM11082042) September 9, 2022