மனதிற்கு பிடித்தால் காதல் திருமணம் செய்து கொள்வேன் என இமைக்கா நொடிகள் நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.
ராஷி கண்ணா தமிழ் சினிமாவின் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்க தமிழன் என்ற படங்களை நடித்து ரசிகர்கள் இதயத்தை திருடியது மட்டும்மில்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார். சமிபத்தில் ஒரு பேட்டியில் கூறியது “எனக்கு பயமே கிடையாது, நான் எல்லோருடனும் சகஜமாக பழகுவேன். நெருங்கிய நண்பர்கள் என்று சினிமா துறையில் எவரும் கிடையாது. சின்ன வயது நண்பர்களுடன் மட்டும் பேசி வருகின்றேன் என்றார்.
எல்லாரும் என்னிடம் திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள் என்று தெரிவித்தார். அதற்கு அவர் கூறுகையில் நேரம் வரும் போது மனதுக்கு பிடித்த யாரையாவது சந்தித்தால் வீட்டில் சொல்லி குடும்பத்தினர் சம்மதம் வாங்கி காதல் திருமணம் செய்து கொள்வேன்” என ராஷி கண்ணா கூறியுள்ளார் . அவர் தற்போது அரண்மனை 3, மேதாவி, சைத்தான் கா பட்சா போன்ற படங்களில் நடிக்க உள்ளார். அதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.