Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு பெரிய நடிகனாக வேண்டும் என்ற ஆசை இல்லை”…. சூப்பர்ஸ்டாரின் பழைய வீடியோ…. இணையத்தில் செம வைரல்….!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பழைய வீடியோவொன்று தற்போது வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் புதிதான சாதனையை படைத்திருக்கின்றார். இவரை குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை என அனைவருக்கும் பிடித்துவிடும். இவரின் முதல் படம் பாலச்சந்தரின் இயக்கத்தில் “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தின் வாயிலாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதலில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் இடையில் வில்லனாகவும் நடித்தார். பிறகுதான் கதாநாயகனாக நடித்தார்.

இவர் நடிக்கும் படங்கள் தத்துவங்கள் நிறைந்ததாகவும் எளிய மக்கள் வாழ்க்கைக்கு உகந்ததாகும் இருந்தன. இன்றளவும் இவரின் திரைப்படங்கள் பேசப்படுகின்றது. இந்நிலையில் ரஜினி பேசிய பழைய வீடியோவொன்று இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. வீடியோவில் ரஜினி பேசியதாவது, “எனக்கு பெரிய நடிகனாக வேண்டும் என்ற ஆசை இல்லை. எனக்கு வீடு, கொஞ்சம் பணம், கார் இருந்தால் போதும் என்று இருந்தேன். ஆனால் எனக்கு இவ்வளவு பெரிய புகழ், நல்ல பெயர், வசதி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என பேசியிருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |