Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனக்கு பெருமையா இருக்கு…. இது எங்களுக்கான நேரம்…. தாதா அதிரடி ட்விட் …!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான சவுரவ் கங்குலி உலகக் கோப்பையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் 2021 உலகக்கோப்பை இது இந்தியாவுக்கான நேரம் என்று பதிவிட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு இந்தியாவில் டி20 உலகக்கோப்பை போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்கு முன்னர் இந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தன்று ஆஸ்திரேலியா வெர்சஸ் இந்தியா இடையேயான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியானது மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

1987-இல் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை நடத்திய பின் பல உலகளாவிய கிரிக்கெட் தொடர்களை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் எங்கள் நாட்டில் கிரிக்கெட் விளையாட உற்சாகமாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஐசிசி தொடர்களில் நான்  ஒரு வீரராக பங்கேற்றுள்ளேன். எங்களுக்கு ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை நடத்துவது பெருமையாக உள்ளது . எனது முழு பங்களிப்பையும் வழங்கி இந்த மதிப்புமிக்க நிகழ்வை சிறப்பான முறையில் நடத்த ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |