பாரதியார் நினைவு மற்றும் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி தன்னுடைய இல்லத்தின் முன்பு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திமுக ஆட்சியை நாம் தமிழர் கட்சி வழிநடத்துகிறது என்ற பெருமை தனக்கு இருக்கிறது. தொல்லியல் குறித்த ஸ்டாலினின் அறிவிப்புகளை பாராட்டிய அவர், நாம் தமிழர் கட்சி என்ன சொல்கிறதோ? அதை பார்த்து தான் திமுக திட்டங்களை செயல்படுத்துகிறது.
பணம் கொடுத்தால் சாதிய பாகுபாடு ஒழிந்து விடுமா? சாதிய பாகுபாடுகளை ஒழிக்கும் ஊருக்கு பத்து லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று முதல்வர் கூறியிருக்கிறார். நான் பேசுவதற்கு எதையும் மிச்சம் வைத்து விடக்கூடாது என்று திமுகவில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அது எனக்கு மகிழ்ச்சிதான் நான். நான் திமுகவில் இருந்திருந்தால் அமைச்சராக கூட இப்போது ஆகியிருப்பேன் என்று பேசியுள்ளார்.