புதிதாகப் பிறந்த பேத்தியை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்துள்ளார் புனேவை சேர்ந்த விவசாயி.
மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் உள்ள பகுதியை சேர்ந்த அஜித் பாண்டுரங் பல்வத்கர் என்பவர் ஒரு விவசாயி. இவரது மகனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு க்ருஷிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருந்துள்ளார் அஜித் பாண்டுரங். குழந்தை பிறந்தவுடன்ஷெவால் வாடியில் உள்ள தாய்வழி தாத்தா பாட்டி வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டது. தற்போது, அங்கிருந்து குழந்தையையும், தாயையும் திரும்ப வீட்டிற்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது.
குழந்தை க்ருஷிகாவிற்கு பிரமண்டமான வரவேற்பு அளிக்க விரும்பிய அஜித் பாண்டுரங், ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். பின்னர், ஷெவால் வாடியில் உள்ள தாய்வழி தாத்தா பாட்டி வீட்டில் இருந்து பேத்தியையும், மருமகளையும் அஜித் பாண்டுரங் ஹெலிகாப்டரில் அழைத்து வந்துள்ளார். பேத்திக்காக அஜித் பாண்டுரங் எடுத்த பிரம்மாண்ட முடிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.