Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு போட்டி நான்தான்…. வேறு யாரும் இல்லை…. நடிகர் வடிவேலு பேட்டி….!!!

நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு தனது 61வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். வடிவேலுவின் மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தனது பிறந்தநாளில் நடிகர் வடிவேலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், எனக்கு போட்டி நான்தான். மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்ததற்கு உதயநிதி ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்துக் கூறினார்.

புதிய படத்தில் பாட இருக்கிறேன். மற்றொருவரை போட்டியாக நான் நினைக்கமாட்டேன். நகைச்சுவைகளில் எனக்கு கிடைத்த மொழிகளில் சிறந்த மொழி, என்னுடைய உடல் மொழி தான்.மக்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய பாக்கியம் என்று நடிகர் வடிவேலு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |