விபச்சாரம் செய்த இரண்டு பெண்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் குணிக்கம் அருகில் உள்ள கோரைக்கனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்கிரண்(24). இவர் திருச்சியில் உள்ள ராம்ஜி நகரில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றார். இவர் ஆன்லைனில் தனக்கு மசாஜ் செய்யவேண்டும் என்று ஒரு செயலி மூலம் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள மசாஜ் கடைக்கு முன் பதிவு செய்திருந்தார்.
அதன்படி நேற்று முன்தினம் மசாஜ் செய்வதற்காக ராஜ்கிரண் அந்த கடைக்கு சென்றார். அப்போது அங்கு இருந்தவர்கள் இரண்டு பெண்களை அரைகுறை ஆடையுடன் காண்பித்து இவரிடம் விபச்சாரத்திற்காக அணுகினர். இதையடுத்து ராஜ்கிரண் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் தலைமையில் காவல்துறையினர் வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இவ்விசாரணையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த 37 வயதான கலைஞர், 49 வயதான ஓட்டல் மேலாளர் ரவி மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தப்பித்து ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் சத்திரம் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.