தமிழில் யாவரும் நலம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நீது சந்திரா. விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டுப் பிள்ளை ,ஜெயம் ரவியின் ஆதி பகவான் உள்ளிட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் ஒரு முன்னணி தொழில்அதிபர் தனக்கு மனைவியானால் 25 லட்சம் தருவதாக கூறியதாக தெரிவித்தார்.
தேசிய விருது பெற்ற 11 படங்களில் பணியாற்றியுள்ளேன் .ஆனால் தன்னை இப்படி அழைக்கின்றனர். எனக்கு இப்போது வேலை இல்லை, பணம் இல்லை, எதிர்காலத்தை பற்றிய கவலை எனக்கு உள்ளது. இப்போது தன்னையே எனக்கு வேண்டாம் என்று உணர்கிறேன். ஒரு வெற்றிகரமான நட்சத்திரத்தின் தோல்வியுற்ற கதை தன்னுடையது என்றும், அவர் கூறினார். நீது சந்திரா தற்போது கரம் மசாலா என்ற படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இவரின் கடைசியாக வெளியான படம் குச் லவ் ஜெயிச்சா.