சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி யு.யு.லலித் என்று ஓய்வு பெற்றுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருந்தவர் நீதிபதி யு.யு.லலித். இவர் இன்று ஓய்வு பெறுகிறார். இதற்காக நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது. நான் தலைமை நீதிபதி பொறுப்பை மூத்த நீதிபதியான டி.ஒய். சந்திரசூட்டிடம் ஒப்படைப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். இதனையடுத்து மும்பை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்த போது அவருடைய தந்தையான சுப்ரீம் கோர்ட்டின் 16-வது தலைமை நீதிபதி ஒய்.வி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு முதல் முதலில் முறையிட்டது நினைவுக்கு வருகிறது.
இந்நிலையில் 37 ஆண்டுகள் வாழ்க்கை பயணத்தை இந்த சுப்ரீம் கோர்ட்டில் கழித்துள்ளேன். மேலும் எனது பதவி காலத்தில் ஒரே நேரத்தில் மூன்று அரசியல் சாசன அமர்வு செயல்பட்டது மகிழ்ச்சியானது மறக்க முடியாத நிகழ்வு. என்னால் இந்த காலகட்ட வக்கீல்களுக்கு செய்துள்ளேன் என்ற திருப்தியுடன் விடைபெறுகிறேன் என கூறியுள்ளார்.