மதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. இதில் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு பதவி வழங்குவது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பின்னர் அவருக்கு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் வைகோ பேசிய பொழுது, வயது மூப்பின் காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டதற்கு, “மரணம் வரும்வரை எனக்கு அரசியலில் ஓய்வு என்பது கிடையாது. மேலும் எனக்கு வயோதிகம் என்றும் ஏற்படாத ஒன்று. நான் எப்பொழுதும் இளமையாகவே உள்ளேன்.
ஆகவே இப்பொழுதும் என்னால் வாலிபால் விளையாட இயலும். என்னுடன் விளையாட வருவீர்களா? என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார். துரை வையாபுரிக்கு பதவி வழங்கியதில் எந்தவித வாரிசு அரசியழும் கிடையாது. வாரிசு அரசியல் என்பது ஒருவரிடம் திணிப்பது ஆகும். இந்நிலையில் துரை வையாபுரிக்கு பொது வாழ்வில் ஈடுபடுவதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளன. பொதுவாழ்வில் ஈடுபட வேண்டாம் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக துரை வையாபுரியை தடுத்து வந்தேன். ஆனால் என்னால் முழுமையாக தடுக்க இயலவில்லை. ஆகவே தொண்டர்களின் விருப்பப்படியே துரை வையாபுரி பொது வாழ்வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்” என்று கூறினார்.