பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று வெற்றி பெற்றதை அடுத்து வர்ணனையாளர் கேள்விக்கு எம்எஸ் தோனி நகைச்சுவையாக பதிலளித்தார்.
நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை அணி மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தியது. . டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 106 ரன்கள் மட்டுமே அடித்தனர். பின்னர் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 15.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மேலும் இந்தப் போட்டி சிஎஸ்கே அணி கேப்டன் தோனிக்கு 200வது ஐபிஎல் போட்டியாகும். இதைத்தொடர்ந்து போட்டியின் முடிவில் வர்ணனையாளர் தோனியிடம் 200வது போட்டியை எப்படி உணர்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதைக் கேட்டவுடன் தோனி எனக்கு வயதானதை உணர்கிறேன் என்று நகைச்சுவையுடன் பதிலளித்தார்.