Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு வலி தாங்க முடியல” வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழவிடையல்  கிராமத்தில் கூலி தொழிலாளியான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் திடீரென  வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த  ரவிச்சந்திரன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த ரவிச்சந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |