தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தனது கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இருவரின் விவாகரத்துக்கான உண்மை காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் சமந்தா சமீபத்தில் நடித்த படங்களே காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவரும் ஒன்றாக இருந்த நேரத்தில் ஷாருக்கான் நடித்து அட்லீ இயக்கி வரும் படத்தில் சமந்தாவிற்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது நாக சைதன்யா தனக்கு குழந்தை வேண்டும் என்று அடம் பிடித்ததால் சமந்தா அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். ஆனால் இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டு பிரிவார்கள் என்று அவர்களே நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். இப்போது மிகப்பெரிய வாய்ப்பு தவறிவிட்டதாக சமந்தா வருத்தப்பட்டு வருகிறார்.