Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எனக்கு வாழ பிடிக்கல…. ஆற்றில் பிணமாக கிடந்த வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ஆற்றில் பிணமாக கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அருளானந்த நகரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீராம் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு விபத்தில் ஸ்ரீ ராம் தனது காலை இழந்தார். இதனால் ஸ்ரீராம் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று குடும்பத்தினரிடம் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஸ்ரீராம் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர். இந்நிலையில் ஸ்ரீராம் சூரக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆற்றில் பிணமாக இறந்து கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சமூக இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின்  சடலத்தை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |