Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எனக்கு வாழ பிடிக்கல…. பெண்ணின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தண்டவாளத்தில் படுத்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள குமாரமங்கலம் கிராமத்தில் அன்புராஜ் என்பவர் வசித்து வருகிறார்.  இருக்கு ராதிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராதிகாவுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராதிகா வேளுக்குடி பகுதியில் அமைந்துள்ள ரயில்வே தண்டவாளத்தில் படுத்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ரயில் ராதிகாவின் மீது எறியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த  ராதிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராதிகாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |