11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சங்கோட்டை பகுதியில் வீரமணி-கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11-ஆம் வகுப்பு படிக்கும் விஷ்ணு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விஷ்ணு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த விஷ்ணு நேற்று வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த விஷ்ணுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விஷ்ணு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.