Categories
மாநில செய்திகள்

எனக்கு 18 மாதம் டைம் கொடுங்க!…. மதுரை முகத்தையே மாத்திடுவேன்…. சவால் விட்ட நிதி அமைச்சர் பி.டி.ஆர்….!!!!

மதுரை தமிழ்சங்க அரங்கில் நடந்த முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சங்கம் நிகழ்வில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு விருதாளர்களை கவுரவித்தார். இந்நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது, நிதிஒதுக்கீடு மற்றும் திட்டங்களை செயலாக்குவதன் வாயிலாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் என கூறினார். மேலும் தங்கம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடு செய்வது மட்டும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது.

அரசால் செய்ய முடியாத தொழில்வளர்ச்சியை தொழில் முனைவோர்களால்தான் செய்ய முடியும். நான் முதல்வன் போன்ற திட்டங்கள் வாயிலாக மாணவர்களுக்கான தனிதிறமையை பள்ளிபருவத்திலிருந்தே உருவாக்க முடியும். எஸ்.சி, எஸ்.டி ஆணையத்திற்கு நிதியும், பணியாளர்களும் நியமிக்க முதல்வர் உத்தரவிட்டதன் பிறகு, அதற்கான நிதிஒதுக்கி 60 அலுவலர்களுடன் அது இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அதன்பின் நிதியமைச்சர் குஜராத் மற்றும் தமிழகத்தை ஒப்பிட்டுபேசினார்.

அதாவது குஜராத் மாடல் ஆட்சியில் அந்த மாநிலத்தின் வருவாய் தமிழகத்தின் வருவாயைவிட சில ஆயிரங்கள் அதிகம் இருக்கலாம். எனினும் தமிழகத்தில் 1000 பேருக்கு 4 மருத்துவர்கள் வீதம் இருக்கின்றனர். குஜராத் மாநிலத்தில் 1000 நபர்களுக்கு 1 மருத்துவர்தான் இருக்கிறார். ஆனால் இங்கு 80 சதவீதம் பெண்கள் உயர் கல்வி பயில்கின்றனர் என்றும் குஜராத்தில் வெறும் 60 சதவீதத்திற்கும் குறைவாகவே உயர்கல்வி கற்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே திராவிடமாடல் ஆட்சியின் வாயிலாக தமிழ்நாடு அனைத்து மாநிலங்களுக்கும் முன் மாதிரியாக விளங்குகிறது என்று தெரிவித்தார். 8 வருடங்களாக தமிழ்நாடு, பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்தது. இப்போது 2 வருடங்களாக மிக சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது எனவும் கூறினார். அத்துடன் மதுரையில் வேலை வாய்ப்பை உருவாக்கும் அடிப்படையிலான முக்கியமான முதலீட்டு திட்டம் விரைவில் துவங்கப்பட உள்ளது. அதன்பின் 18 முதல் 24 மாதங்களில் மதுரையின் முகமே மாறும் எனவும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |