Categories
தேசிய செய்திகள்

“எனக்கு 5 லட்சம் பணமும் ஒரு காரும் வேணும்”… மறுத்த மனைவி… கணவன் செய்த கொடூர காரியம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் வரதட்சணைக்காக கட்டிய கணவரே சகோதரர் மற்றும் நண்பர்களை வைத்து மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள தடா கிராமத்தை சேர்ந்த 27 வயது பெண்ணிற்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு அந்தப் பெண் வீட்டில் அதிகப்படியான வரதட்சனை கொடுக்கப்பட்டது. இதனால் சிறிது காலம் அப்பெண்ணின் கணவர் அவரை மிகவும் சந்தோஷமாக வைத்திருந்தார். மூன்று வருடங்கள் கழித்து அந்தப் பெண்ணிடம் அவரது கணவர் எனக்கு ஐந்து லட்சம் பணமும் ஒரு காரும் வரதட்சணையாக வேண்டும் என்று கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதற்கு மனைவி கொடுக்க முடியாது என்று கூறியதால், கணவரின் சகோதரர் மற்றும் சகோதரி நண்பர்கள் ஆகியோரை அழைத்து வந்து மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமை செய்துள்ளார். இது குறித்து கணவரிடம் தெரிவித்தபோது நான் கேட்ட வரதட்சணையை நீ கொடுக்கும் வரை இப்படி தான் நடக்கும் என்று கூறியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் கொடுமைகளைத் தாங்க முடியாத அந்த இளம்பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கணவர் மற்றும் கணவரின் சகோதரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |