உத்தரப்பிரதேச மாநிலம் பரெய்லி பகுதியைச் சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர் ஆன பகவான் ஸ்வரூப். இவர் சம்பவத்தன்று பரெய்லி பகுதியில் உரிய ஆவணம் இல்லாமல் பைக்கில் சென்றதற்காக காவல் அதிகாரி ஒருவர் இவருக்கு ரூபாய் 500 அபராதம் விதித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மின்வாரிய ஊழியர் பகவான் காவல் நிலைய மின் இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இதுகுறித்து கேட்டபோது காவல் நிலையத்திற்கு உரிய மீட்டர் இல்லை, திருட்டு இணைப்பு தான் உள்ளது என்று தன் தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளார். காவலர் அபராதம் விதித்ததால் போலீசாரை பழி வாங்க மின்வாரிய ஊழியர் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.