Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எனது இறப்பு சான்றிதழ் வேண்டும்…. முதியவர் அளித்த புகார்…. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை….!

எனது இறப்பு சான்றிதழை பெற்று தரக்கோரி முதியவர் ஒருவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ராசிபுரத்தை அடுத்துள்ள கானாம்பாளையம் பகுதியை சேர்ந்த செல்லப்ப கவுண்டர்(85) என்பவர் கலந்துகொண்டு மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசனிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் எனது பெயரில் உள்ள மின் இணைப்பு குறித்து மின்வாரிய அலுவலகத்தில் விசாரிக்க சென்றபோது நான் இறந்துவிட்டதாகவும், அதற்க்கான இறப்பு சான்றிதழ் அவர்களிடம் உள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் நான் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாக கூறிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மின் வாரியத்தில் உள்ள இறப்பு சான்றிதழை பெற்று தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதனை கேட்டறிந்த வருவாய் ஆய்வாளர் இதுகுறித்த நடவடிக்கையை உடனடியாக எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |