இளவரசர் ஹரி தனது எதிர்காலம் குறித்து அச்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் ராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த எட்டாம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக பால்மோரல் அரண்மனையில் உயிரிழந்தார். இதனால் புதிய மன்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இளவரசர் வில்லியம்-கேட் தம்பதிக்கு இளவரசர் ஜோர்ஜ் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் இளவரசர் ஹரி தனது எதிர்காலத்தை நினைத்து அஞ்சுவதாக தகவல்கள் வெளியாகிள்ளது. அதில் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலை எதிர்காலத்தில் நமக்கும் ஏற்படலாம் என ஹரி அஞ்சுவதாக கூறப்படுகிறது. மேலும் குட்டி இளவரசரான ஜோர்ஜ் 18 வயதை கடந்தால் அவருக்கு ராஜ குடும்பத்தின் பொறுப்புகள் அதிகரிக்கும்.
அப்போது இளவரசர் ஹரி அரண்மனைக்கு பொருத்தமற்றவர் என மொத்தமாக ஒதுக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. தற்போது 62 வயதான இளவரசர் ஆண்ட்ரூ ராஜ குடும்பத்தில் செயல்படும் உறுப்பினராக இல்லை. அதற்குக் காரணம் அவர் ராணியாரின் செல்லப்பிள்ளை என்பதாலேயே அவர் மொத்தமாக ஒதுக்கப்படாமல் இருந்து வந்தார். ஆனால் தற்போது மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மகன் வில்லியம் ஆகியோரின் ஆலோசனையின் படி ஆண்ட்ரூவின் மொத்த பொறுப்புகளும் பறிக்கப்பட்டது. தற்போது அவர் செயல்படாத உறுப்பினர்கள் வரிசையில் உள்ளார். மேலும் இதுபோன்று தனது 60 வயதிலும் இக்கட்டான சூழலில் தள்ளப்பட வாய்ப்புள்ளதாக இளவரசர் ஹரி அச்சம் தெரிவித்துள்ளார். மேலும் குட்டி இளவரசர் ஜோர்ஜ் பொறுப்புக்கு வரும் முன்னர், அவருக்கு 18 வயதாகும் முன்னர் அவர் தனது இருப்பை தக்க வைக்க வேண்டும் என ஹரி முடிவு செய்துள்ளதாகவும், தற்போது தனக்கு ஆதரவாக ராணியாரும் இல்லை என்பதால் எதிர்காலம் சிக்கலில் முடியலாம் என ஹரி எண்ணுவதாக கூறப்படுகிறது.