Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“எனது கணவர் இறப்பிற்கு இவங்க தான் காரணம்” மனைவி மனு தாக்கல்…. 4 வாரத்தில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு….!!

மதுரை முடக்காத்தான் பகுதியில் கஜகிரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, எனது கணவர் விவேகானந்தகுமார் சிம்மக்கல் பகுதியில் கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் விவேகானந்தகுமார் மற்றும் வேலை பார்க்கும் சக தொழிலாளி ஒருவரும் கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சோதனையில் நின்று கொண்டிருந்த காவல்துறையினர் லத்தியை காட்டி மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறியதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.

இதனை பார்த்த காவல்துறையினர் அருகில் மருத்துவமனை இருந்தும் அவர்களை உடனடியாக அழைத்துச் செல்லாமல் தாமதமாக அழைத்துச் சென்றதால் எனது கணவர் உயிரிழந்தார். எனது கணவர் இறப்புக்கு போலீஸ்தான் காரணம். என் கணவர் இறந்ததால் நானும் என் குழந்தைகளும் தற்போது வறுமையில் வாடுகிறோம். எனவே, எனக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு மற்றும் எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கீழ் கோர்ட் 6 மாதத்தில் இந்த வழக்கு முடிக்க வேண்டும் எனவும், இழப்பீடு வழங்குவது குறித்து உள்த்துறை செயலாளர் 4 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
.

Categories

Tech |