Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு போவதாக கூறி சென்ற பெண்…. 2 குழந்தைகளுடன் மாயமான சம்பவம்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…!!

குழந்தைகளுடன் காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள காவடிக்காரனூர் பகுதியில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹாசினி என்ற மகளும், சர்வின் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் இருப்பதாக கூறிவிட்டு மதியம் வீட்டில் இருந்து சென்ற ஜீவிதாவும், குழந்தைகளும் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் ஜீவிதா மற்றும் அவரது குழந்தைகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர்கள் கிடைக்காததால் குடும்பத்தினர் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் ஜீவிதா தனது குழந்தைகளை ஸ்கூட்டரில் பள்ளியிலிருந்து கூட்டிக்கொண்டு கொங்கணாபுரம் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ஸ்கூட்டர் சாவியை அருகிலிருந்த பேக்கரி கடையில் கொடுத்து விட்டு தனது குடும்பத்தினர் இதனை வாங்கிக் கொள்வார்கள் என கூறியுள்ளார். அதன்பின் எடப்பாடியில் இருந்து சேலத்திற்கு செல்லும் பேருந்தில் ஜீவிதா தனது குழந்தைகளுடன் ஏறி செல்வது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்ஹ

Categories

Tech |