வலிமை படத்திற்கு பின் மீண்டும் அஜித்துடன் சேர்ந்திருக்கும் போனிகபூர் அடுத்ததாக மலையாள பிரபல நடிகர் படத்தை தயாரிக்க இருக்கின்றார்.
நடிகர் அஜித்தை வைத்து மூன்று படங்களை தயாரித்து வருகிறார் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். நேர்கொண்டபார்வை படத்திற்கு பின்பு வலிமை படத்தை தயாரித்துள்ளார். போனிகபூர் வினோத்தை வைத்து இந்த ஆண்டு தீபாவளிக்கு ஒரு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் மோகன்லாலை தனது அடுத்த தயாரிப்பில் நடிக்க வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு போனிகபூர் மோகன்லாலுக்கு பெரிய சம்பளத்தை கொடுத்துள்ளார்.. மலையாள சினிமாவில் பெரிய பட்ஜெட் படமானது குறைவாகவே இருக்கும். போனி கபூர் இந்தப்படத்தை பெரிய அளவில் எடுக்க இருப்பதாக மலையாள சினிமாவில் பேசப்படுகின்றன.