Categories
இந்திய சினிமா சினிமா

எனது தாய் வீட்டுக்கு வரும் உணர்வு…. அமலா நெகிழ்ச்சி….. எதற்கு தெரியுமா?….!!!!

80’ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் அமலா. ரஜினி, கமல், பாக்கியராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகஅர்ஜுனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு திரைத்துறையில் இருந்து விலகி இருந்த அமலா தற்போது ஸ்ரீ கார்த்திக் இயக்கியுள்ள கணம் திரைப்பட திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தமிழ், தெலுங்கில் தயாரித்துள்ளது. சர்வானந்த். ரிது வர்மா, ரமேஷ் திலக், நாரதர், சதீஷ் பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் அமலா அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: “தமிழ் சினிமாவுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாவாக வந்திருக்கிறேன். அடிக்கடி சென்னை வருவேன். அப்போது என் தாய் வீட்டிற்கு வரும் உணர்வு இருக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Categories

Tech |