டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய மூத்த வீராங்கனை மேரிகோம் கொலம்பியாவின் இன்கிரிட் வலென்சியா என்பவருடன் போட்டியிட்டார். இரண்டாவது முறை ஒலிம்பிக் போட்டிக்கு படையெடுத்த மேரிகோம் இது கடைசி ஒலிம்பிக் போட்டி என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் அவர் அனுபவம் வாய்ந்தவர் என்பதும், ஏற்கனவே ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவர் ஆவார். முதல் ரவுண்டில் வலென்சியாக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடி அவரை வெற்றி பெற்றார்.
பின்னர் இரண்டாவது ரவுண்டில் தனது வியூகத்தை மாற்றி பதிலடி கொடுத்தார். கடைசி ரவுண்டில் இருவரும் சரமாரியாக குத்துகளை பரிமாறினர். இருப்பினும் நடுவர்களின் முடிவை வழங்கி அவருக்கு ஆதரவாக இருந்தது தொகுதியில் நடுவர்களின் நியாயமற்ற ஒருதலைப்பட்சமான முடிவால் தோல்வி அடைந்ததாக அவர் புகார் தெரிவித்தார்.மேலும் ஒலிம்பிக் தூதர் பொறுப்பை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார். மேரி கோம் வெற்றியாளர் எனவும், நடுவர்களின் புள்ளி கணக்கிடும் முறை வருத்தம் அளிப்பதாகவும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.