Categories
தேசிய செய்திகள்

“எனது பரிசு பொருட்கள் ஏலத்தில் பங்கேற்க வாருங்கள்”… மக்களுக்கு அழைப்பு விடுத்த மோடி…!!!

பிரதமர் மோடி பல ஆண்டுகளாக தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள் மற்றும் நினைவு பரிசுகளை ஏலம் விட முடிவு செய்து அறிவிப்பு விடுத்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பல ஆண்டுகளாக கிடைத்த பரிசுப் பொருட்கள் மற்றும் நினைவுப் பொருட்கள் அனைத்தும் தற்போது ஏலம் விடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மோடி தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை ஏலம் விட பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் பங்கேற்ற வீரர்கள் தங்கள் பொருட்களை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்திருந்தனர். இந்த பொருட்களை அதிக விலைக்கு ஏலம் கேட்கபட்டதாக அறியப்படுகிறது

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “கடந்த பல ஆண்டுகளாக எனக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள் மற்றும் ஒலிம்பிக் வீரர்கள் எனக்கு அளித்த நினைவுப் பொருட்கள் அனைத்தும் ஏலம் விடப்படுகின்றன. இதில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இதில் வரும் வருவாய் கங்கையை சீரமைக்கும் இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Categories

Tech |