Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“எனது மகனை எப்படியாவது மீட்டு தாருங்கள் ” கண்ணீர் வடிக்கும் பெற்றோர்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தனது மகனை மீட்டு தருமாறு பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என் பாளையம் பகுதியில் தங்கராஜ் வளர்மதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிரன் என்ற மகன் உள்ளார். இவர் உக்ரைனில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து வருவதால் பல தமிழக மாணவர்கள் அங்கு சிக்கியுள்ளனர். இந்நிலையில் கிரணின் பெற்றோர் தன்னுடைய மகன் சுரங்ககளில் தங்கியிருப்பதாகவும் உணவின்றி தவித்து வருவதாகவும் கூறியுள்ள அவர்கள் தன மகனை தமிழக அரசு மீது தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இந்திய அரசு அங்கு படிக்கும் தமிழக மாணவர்களை போலந்து மற்றும் ருமேனியா எல்லைப் பகுதிகளுக்கு வர வேண்டுமெனவும், அங்கிருந்து இந்தியாவிற்கு பத்திரமாக மீட்கப்  படுவார்கள் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கிரண் படிக்கும் மருத்துவக் கல்லூரி டெனிப்ரோவில் அமைந்துள்ளது. டெனிப்ரோவிலிருந்து ருமேனியா போலந்து எல்லைக்கு 1,300 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்தப் பகுதியிலிருந்து போலந்து ருமேனியாவிற்கு செல்ல சாலை வழியை பயன்படுத்த முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். மேலும் 1,000 ரூபாய் கொடுத்தால் கூட காருக்கு பெட்ரோல் கூட கிடைப்பதில்லை. இப்படி இருக்கும் போது அவர்கள் எவ்வாறு வரமுடியும்.  எனவே தமிழக அரசு தனது மகன் மற்றும் அவனைப் போல் சிக்கி தவிக்கும் மற்ற மாணவர்களையும் அங்கிருந்து எப்படியாவது மீட்டு வருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |