Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எனது மகளுக்கு இதே மாதிரி செய்யனும்…. “உங்க நகையை காட்டுங்க”… மூதாட்டியை ஏமாற்றி 6 1/2 பவுன் நகையுடன் தப்பிய நபர்…!!

மூதாட்டியை ஏமாற்றி 6 1/2 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் காட்டு சித்தாமூரில் வசித்து வருபவர் 80 வயதுடைய சொர்ணம்மாள். இவருடைய மகன் 50 வயதுடைய அச்சுதன். இவர் திருமணம் ஆகாதவர். நேற்று முன்தினம் காலை அச்சுதன் மாடு மேய்க்க சென்றுள்ளார். சொர்ணம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சொர்ணம்மாளிடம் 40 வயதுள்ள ஒரு நபர் வந்து உங்களது நிலத்திற்குப் பக்கத்தில் எனக்கு நிலம் உள்ளது என்று கூறி அறிமுகமானார்.

அதன்பின் தனது மகளுக்கு உங்களிடம் இருக்கின்ற நகை மாதிரி நகை செய்ய வேண்டும். அதற்கு உங்கள் நகையை காண்பிங்கள் என்று கேட்டார். இதை நம்பிய சொர்ணம்மாள் பீரோவை திறந்து நகையை எடுத்து காட்டினார். சொர்ணம்மாளின் கவனத்தை திசை திருப்பி விட்டு அவர் வைத்திருந்த 6 பவுன் நகை, ரூ 40 ஆயிரத்தை திருடி விட்டு தப்பித்து சென்று விட்டார். இதுகுறித்து நல்லான்பிள்ளை பெற்றாள் காவல் நிலையத்தில் சொர்ணம்மாள் புகார் அளித்துள்ளார். இப்புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |