Categories
சினிமா

“எனது மகளுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத பரிசை கொடுத்தவர் மணிரத்தினம்”…. பிரபல நடிகை பெருமிதம்….!!!!

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். இவர் உலக அழகி ஐஸ்வர்யா பட்டத்தை வென்றதால் உலக அழகி என்று தான் அழைக்கப்படுவார். அதனை தொடர்ந்து மறைந்த நடிகர் விவேக் அவர்கள் எந்திரன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில், இனி எத்தனை உலக அழகிகள் வந்தாலும் தமிழக மக்களுக்கு எப்போதுமே ஐஸ்வர்யாராய் தான் அழகு என்று கூறினார். நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்தினம் பிரம்மாண்டமாக இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின்  ப்ரமோஷன்களில் ஐஸ்வர்யா ராயும் கலந்து கொண்டு வருகிறார். அப்போது ஒரு பேட்டியில் ஐஸ்வர்யா கூறியது, மணிரத்தினம் தனது மகள் ஆராத்யாவிற்கு வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு பரிசு அளித்தார். இந்த பிரமாண்டமான படத்தில் எனது மகளுக்கு ஒரு சீன் எடுக்க ஆக்ஷன் என்று சொல்லு வாய்ப்பை கொடுத்து இருக்கிறார். அந்த தருணத்தை எனது மகள் எப்போதுமே மறக்க மாட்டார். அது மிக பெரிய பரிசு. மணிரத்னம் அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |