சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த மாதம் 4-ம் தேதி இந்த மாணவி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சிறுமியை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.