சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.
சேலம் மாவட்டத்திலுள்ள மூக்கங்காடு பகுதியில் அய்யம்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான தர்மன் என்ற மகன் உள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு தர்மன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையில் தங்களது மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தர்மன் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காட்டு கொட்டகையில் இருந்த சிறுமியை காவல்துறையினர் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் தர்மனை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி குற்றவாளியான தர்மனுக்கு 30000 ரூபாய் அபராதமும், 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.